உலக நாடுகள் மோசமான பணவீக்கத்தையும், பல்வேறு வர்த்தகப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வரும் நிலையில், பிரிட்டன் நாட்டு அரசு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையும் வியப்பில் உள்ளது.
இந்திய அரசு ஏற்கனவே பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் ரூபாய் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ள நிலையில், பல மாத ஆலோசனைக்குப் பின்பு பிரிட்டன் அரசு கிரிப்டோ சந்தைக்குள் நுழைய முடிவு செய்துள்ளது. இதோடு ரிஷி சுனக் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
3 வாரத்தில் 40% லாபம்.. அடடா இதை மிஸ் பண்ணிட்டோமே.. புலம்பும் முதலீட்டாளர்கள்..!
ரிஷி சுனக்
பிரிட்டன் அரசின் நிதியமைச்சரான ரிஷி சுனக், அந்நாட்டு நாணயங்களை அச்சிடும் ராயல் மின்ட் அமைப்பைக் கோடைக் காலத்திற்குள் NFT உருவாக்கி பயன்பாட்டிற்குக் கொண்டு வர உத்தரவிட்டு உள்ளதாக, பிரிட்டன் நாட்டின் பொருளாதாரச் செயலாளர் ஜான் கிளென் தெரிவித்துள்ளார்.
ஜான் கிளென்
மேலும் ஜான் கிளென் கூறுகையில், பிரிட்டன் அரசு பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கடன் வாங்குவது மட்டும் அல்லாமல் கடன் கொடுக்கவும் முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் பிரிட்டன் அரசு விரைவில் டிஜிட்டல் சொத்துக்களை ஒழுங்கு முறைப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோ ஹப்
இதுகுறித்து பிரிட்டன் அரசின் நிதியமைச்சரான ரிஷி சுனக் தனது டிவிட்டரில் கூறுகையில், நாங்கள் பிரிட்டன் நாட்டைக் கிரிப்டோ சொத்துக்களின் ஹப் ஆக மாற்றும் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். மேலும் எதிர்கால வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பிரிட்டனில் உருவாக உள்ளோம். இன்று ஜான் கிளென் இத்துறையில் எப்படி முதலீட்டையும் தொழில்நுட்பத்தை ஆதரிப்பது என்பதை ஆய்வு செய்ய உள்ளார் எனத் தெரிவித்தார் ரிஷி சுன்க்.
குழப்பம்
மேலும் அவர் பிரிட்டன் கிரிப்டோ வர்த்தகத்திற்கு ஆதரவாக உள்ளது. பிளாக்செயின், கிரிப்டோகரன்சி, NFT குறித்து எதிர்க்கருத்துக்கள் இருக்கும் இதேவேளையில் ஆதரவான கருத்துக்களும் உள்ளது. சிலர் கிரிப்டோகரன்சி மக்களை எப்படியெல்லாம் பாதிக்கும் எனக் கேள்விகளை முன்வைக்கின்றனர்.
எந்த இடம்..?
இந்த அனைத்து கேள்விகளுக்கும் இது தான் பதில், கிரிப்டோ தொழில்நுட்பங்கள் நம்முடைய எதிர்காலத்தில் மிகப்பெரியதாக இருக்கும் என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை. இந்த நிலையில் இத்துறையில் பிரிட்டன் மேலே இருக்க வேண்டுமா அல்லது கீழே இருக்க வேண்டுமா என்பது தான் தற்போதைய கேள்வி என ரிஷி சுன்க் தெரிவித்துள்ளார்.
மக்கள் கேள்வி..
இதேவேளையில் பிரிட்டன் நாட்டில் தற்போது விலைவாசி மிகவும் அதிகமாக இருக்கும் நிலையிலும், பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரிட்டன் அரசு ஏன் இந்த முடிவை எடுத்துள்ளது. விலைவாசி உயர்வுக்கும் NFT உருவாக்க ராயல் மின்ட் அமைப்புக்கு உத்தரவிடுவதற்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வியும் பிரட்டன் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Rishi Sunak ordered Royal Mint to create NFT; Britain wants to be global hub for crypto
Rishi Sunak ordered Royal Mint to create NFT; Britain wants to be global hub for crypto ரிஷி சுனக் போட்ட புதிய உத்தரவு..! பிரிட்டன் நாட்டில் கிரிப்டோ ஹப்..!