இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இலங்கை தமிழரான நடிகை லாஸ்லியா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதையடுத்து, மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 31ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இலங்கை தமிழரும் பிக்பாஸ் புகழுமான நடிகை லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், மிக மோசமான யுத்தத்தை எதிர்கொண்ட இலங்கையர்களாகிய நாம், நமது குடும்பங்கள் உட்பட அனைத்தையும் இழந்தோம், சுனாமியை எதிர்கொண்டோம், 2019ல் தேவாலயங்களில் குண்டுவெடிப்புகளை எதிர்கொண்டோம், கொரோனாவை எதிர்கொண்டுவருகிறோம், இப்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம்.
இது அனைத்தும் நமது தவறு அல்ல. நாம் எல்லாவற்றையும் எதிர்கொள்வோம். காரணம் நாம் இலங்கை மக்கள்.
ஜேர்மனியில் குறிவைக்கப்படும் உக்ரேனியர்கள்! அமைச்சர் பரபரப்பு தகவல்
ஒவ்வொரு சூழ்நிலையிலும், இவை அனைத்தையும் எதிர்கொள்வதற்கு தேவையான அளவுக்கு வலிமை நம்மிடம் இருக்கிறது.
இப்போது, இந்த பரிதாபகரமான சூழ்நிலையிலிருந்து மீண்டு வர ஒன்றாக இருப்போம் மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம் என லாஸ்லியா தெரிவித்துள்ளார்.