பெங்களூரு, : ”முன்னாள் மல்யுத்த வீரர்களின் உதவித்தொகை, 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது,” என இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாராயண கவுடா தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:முதல்வர் பசவராஜ் பொம்மை, 2022 – -23 பட்ஜெட்டில், 50 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் மல்யுத்த வீரர்களின் உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, மாநில அளவில் 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும்; தேசிய அளவில் 3,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாகவும்; சர்வதேச அளவில் 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.நான், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, முன்னாள் மல்யுத்த வீரர்கள், தங்களின் உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும் என கேட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு, : ”முன்னாள் மல்யுத்த வீரர்களின் உதவித்தொகை, 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது,” என இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாராயண கவுடா தெரிவித்தார்.பெங்களூரில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.