கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது புகாரளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்ணை அறிவித்தார்.

இது குறித்த அவர் வெளியிட்ட அறிக்கையில், நியாய விலைக்கடைகளில் அரிசிக் கடத்தலில் ஈடுபடுதல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான புகாரளிக்க விழைவோர் கூட்டுறவு சங்க பதிவாளரின் (98840 00845) எண்ணில் புகாரளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.