இலங்கையில் அவசரகால பிரகடன சட்டத்தை செய்வாய்க்கிழமை(ஏப்ரல் 5 திகதி) நள்ளிரவு முதல் திரும்பப்பெறுவதாக அந்தநாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடுமையான உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்இணைப்பு துண்டிப்பு போன்ற பல்வேறு நெருக்கடியை அந்த நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.
மேலும் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் தொடர்ந்து கடுமையான உச்சத்தை தொட்டு வருவதால் இலங்கை அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் என பொதுமக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி ஆளும் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
photo:Andy Buchanan/Pool via REUTERS
பொதுமக்களின் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 1ம் திகதி அவசரகால பிரகடன சட்டத்தை ஆளும் இலங்கை அரசு அறிவித்து, அமைச்சரைவையிலும் பல மாற்றங்களை கொண்டுவந்தது.
இருப்பினும் ஆளும் அரசு முற்றிலுமாக பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு வெளியான இலங்கை அரசின் வர்த்தமானி அறிவிப்பில், ஏப்ரல் 5ம் திகதி நள்ளிரவில் இருந்து அவசர கால பிரகடன சட்டத்தை திரும்பப்பெறுவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.