உயிரிழந்த வாலிபரின் உறுப்புகள் 6 பேரின் மறுவாழ்வுக்கு தானம்| Dinamalar

உடுப்பி, : சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நபரின் உறுப்புகள், ஆறு பேருக்கு பொருத்தப்பட்டன.உடுப்பி பிரம்மாவரை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் சீனிவாஸ், 19. ஏப்ரல் இரண்டாம் தேதி, இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றிருந்தார்.உப்பினகோட்டே அருகே செல்லும் போது வாகன விபத்தில் படுகாயமடைந்த அவர், மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி மூளை சாவு ஏற்பட்டது.

இதனால் சீனிவாசின் பெற்றோரிடம், உறுப்பு தானம் செய்வது குறித்து டாக்டர்கள் ஆலோசித்தனர்.இதற்கு பெற்றோரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, சீனிவாசின் இரு சீறுநீரகம், கல்லீரல், தோல், கண் கரு விழிகள், ஆறு பேருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, இரு கருவிழிகள், இரு சிறுநீரகம், தோல், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருந்த மருத்துவமனைக்கும், கல்லீரல், பெங்களூரிலுள்ள மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.