மூடர் கூடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானாவர்
நவீன் முகமது அலி
. தயாரிப்பாளராகவும் உள்ளார் நவீன். தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நவீன், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் பள்ளிக்கூட வளாகத்தில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் நவீன். செங்கல்பட்டு அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் சில மாணவர்கள் முடி நீளமாக வைத்தப்படி பள்ளிக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிய பள்ளிக்கு சென்றார். அப்போது மாணவர்கள் நீண்ட முடியுடன் இருப்பதை பார்த்த நவீன், அவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முடி திருத்தம் செய்ய ஏற்பாடு செய்தார்.
சுமார் 300 மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யும் செய்தி வெளியானது. இதனை பார்த்துதான் கொந்தளித்துள்ளார் நவீன். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இது ஒருவித சர்வாதிகாரம் இல்லையா? ஹேர்ஸ்டைலுக்கும் கேரக்டருக்கும் சம்மந்தம் உண்டு என்று நம்புகிறீர்களா? இது மனித உரிமை மீறலில் வராதா? சாமிக்கு வளர்க்கும் முடியும் வெட்டப்படுமா? ஊராட்சிமன்றத் தலைவர் பள்ளி நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் உள்ளதா? என கேட்டு விளாசியுள்ளார்.
அஜித் தன் கைப்பட எழுதிய கடிதம்! யாருக்காக தெரியுமா?
அடுத்த செய்திஅம்மாடி, ஏ.ஆர். ரஹ்மான் மகனின் டி சர்ட் இம்புட்டு விலையா!!!