திருவண்ணாமலையில், 9ம் வகுப்பு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாவட்ட வருவாய் அலுவலக உதவியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற அந்த நபர், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறான்.
திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தகப்பனான ரமேஷ், தனது வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாணவியை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்தை அடுத்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. விசாரணையில், ரமேஷ் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதை அடுத்து அவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.