புடாபெஸ்ட் : ஹங்கேரியில், தண்டவாளத்தின் குறுக்கே வந்த லாரி மீது ரயில் மோதிய விபத்தில், ஐந்து தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் தெற்கு பகுதியில் உள்ள மைண்ட்ஸ்சென்ட் நகரில், நேற்று காலை பயணியர் ரயில் சென்று கொண்டு இருந்தது.அப்போது, ஏழு தொழிலாளர்களுடன் தண்டவாளத்தின் குறுக்கே வந்த லாரி மீது, ரயில் மோதியது. இதில், லாரி தலைகீழாக கவிழ்ந்ததில், ஐந்து தொழிலாளர்கள் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலை ஆபத்தாக உள்ளதாக, டாக்டர்கள் கூறினர். லாரி மீது வேகமாக மோதியதால், ரயிலும் தடம் புரண்டது. அதிலிருந்த 10 பயணியர், லேசான காயம் அடைந்தனர். அப்பகுதியில் சாலை மூடப்பட்டு, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
புடாபெஸ்ட் : ஹங்கேரியில், தண்டவாளத்தின் குறுக்கே வந்த லாரி மீது ரயில் மோதிய விபத்தில், ஐந்து தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் தெற்கு பகுதியில் உள்ள
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.