பல்லாரி : பல்லாரி மாநகராட்சி மேயர் தேர்வில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் பெண் கவுன்சிலர், தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது கணவரும் கட்சியை விட்டு விலகினார்.பல்லாரி மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் கடந்த மாதம் 19ல் நடந்தது.
இதில் காங்கிரசை சேர்ந்த ராஜேஸ்வரி, 40 மேயராகவும், முலான பீவி, 45 துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேயர் தேர்தல் முடிந்து ஒரு மாதம் கூட முடிவடையான நிலையில் ஆறாவது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் பத்ம ரோஜா, தன் பதவியை ராஜினாமா செய்தார். அதே போல அவரது கணவரான முன்னாள் கவுன்சிலர் விவேக்கும் காங்கிரசில் இருந்து விலகினார்.இது குறித்து பத்ம ரோஜா கூறுகையில், ”மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் யு.டி. காதர் ஆகிய இருவரும் மேயர் தேர்வின் போது கட்சியில் அனுபவத்தை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.
50 ஆண்டாக கட்சிக்கு உழைத்த எங்களை புறக்கணித்து விட்டனர்.”மாறாக முதல் முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு மேயர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் ராஜினாமா செய்தோம்,” என்றார்.
Advertisement