இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1,086 பேருக்கு பாதிப்பு..71 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,086 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,30,925ஆக உயர்ந்தது.* புதிதாக 71 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,487 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,198 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,97,567 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11,871 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.*இந்தியாவில் 1,85,04,11,569 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,49,699 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.