கணவரை கொல்வது எப்படி என்ற கட்டுரையை எழுதியவர் நான்சி கிராம்ப்டன் பிராபரி 71. அந்தக் கட்டுரையில் அவர் வாழ்க்கையைத் துணையை எப்படி கொள்வது என்பதை எழுதியிருந்தார்.
இந்நிலையில், அவரது கணவர் டேனியல் ப்ராபி கடந்த 2018 ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், அவரது மனைவியான நான்சியிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
டேனியல் உயிரிழந்தால் 1.5 மில்லியன் டாலர் வாழ்நாள் காப்பீடாக கிடைக்கும். இதன்காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சுயசரிதை எழுதும் பிரபல அமெரிக்க பாடகி
‘பாப்’ பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ், தனது சுய சரிதையை எழுதுகிறார். இதற்காக பதிப்பாளருடன் சுமார் ரூ.112 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகமெங்கும் ரசிகர்களை கொண்டிருப்பவர் பிரபல ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். 40 வயதான இவர் பாடகி, பாடலாசிரியர், நடன கலைஞர் என பன்முகங்களைக் கொண்டவர் ஆவார்.
இவர் தனது சுய சரிதை புத்தகத்தை எழுதுவதாக உறுதி செய்துள்ளார். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு வெளியிட்டார்.
தனது வாழ்க்கையில் நடந்த பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத வேதனை நினைவுகளையும் அவர் பகிர்ந்து கொள்ளப்போவதாக கூறி உள்ளார்.
இவர் விவாகரத்தனா நிலையில் தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்ததும், கடந்த ஆண்டு இறுதியில் அதில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.
சுய சரிதை எப்போது வெளியாகும், எந்தப் பதிப்பாளர் வெளியிடப்போகிறார் என்பது பற்றிய கூடுதல் தகவல்களை அவர் வெளியிடவில்லை. இருப்பினும், இவரது சுய சரிதையை வெளியிட சைமன் அண்ட் ஷஸ்டர் பதிப்பகம், இவருடன் 15 மில்லியன் டாலர் (சுமார் ரூ.112 கோடி) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் போரில் அணு குண்டு? – ரஷ்யா பதில்
உக்ரைன் போரில் ரஷியா அணுகுண்டை கையில் எடுக்கக்கூடும் என ஊகங்கள் நிலவி வந்தன. ஆனால் இதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ரஷியா நிராகரித்துள்ளது. இதுபற்றி ஐ.நா. ஆயுத குறைப்பு ஆணைய கூட்டத்தில், ஐ.நா. சபைக்கான ரஷியாவின் முதல் துணை பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி பேசும்போது கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், “ஊகங்களுக்கு மாறாக ரஷியாவின் அணுசக்தி திறனைப் பயன்படுத்துவது, ரஷியா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ஏற்பட்டு, அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே, அவற்றுக்கு (அணு ஆயுதங்களால்) பதில் அளிப்பது சாத்தியம்” என குறிப்பிட்டார்.
மேலும் “இந்த அளவுகோல்கள், உக்ரைனில் தற்போது வெளிவரும் சூழ்நிலைக்கு எந்த வகையிலும் பொருந்தாது. மேலும் அணுசக்தி போரில் வெற்றியாளர்கள் இருக்க முடியாது. அணுசக்தியை கட்டவிழ்த்து விடக்கூடாது என்ற கொள்கையை ரஷியா உறுதியுடன் கடைப்பிடிக்கிறது” எனவும் அவர் கூறினார்.
புச்சா படுகொலை: ரஷ்யாவை எதிர்க்க துணிந்த இந்தியா.. ஐ.நா.,வில் பேசியது என்ன?
இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பு கரைந்ததால் பெட்ரோல்,டீசல், கியாஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், இலங்கை ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.300-ஐ கடந்து விட்டது.
அந்தவகையில் இலங்கை வர்த்தக வங்கிகளில் நேற்று டாலரின் மதிப்பு ரூ.310 ஆக இருந்தது. இது பொருளாதார வல்லுனர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil