தனிக்குழுவாக செயற்பட்டாலும் எதிர்க்கட்சியில் இணையப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று (05) பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக செயற்படுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஊடகமொன்றுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தல் ஒன்றிற்கு செல்லாமல், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.