எலான் மஸ்க் வாக்குறுதி.. டிவிட்டர் நிர்வாகக் குழு நம்மதி பெருமூச்சுவிட்டனர்..!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தில் பங்குகளை வாங்கும் முன்பே, டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவான பராக் அகர்வாலிடம் நட்பு ரீதியாகப் பேசி தான் டிவிட்டர் பங்குகளை வாங்கும் திட்டம் குறித்துப் பேசி இருதரப்புக்கும் ஒப்புதல் பெற்ற பின்னரே 9.2 சதவீத பங்குகளை வாங்கினார் எலான் மஸ்க்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதேவேளையில் எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாகத்திற்கு மிக முக்கியமான வாக்குறுதியை கொடுத்துள்ளார்.

எலான் மஸ்க்

உலகிலேயே மிக முக்கியமான சமுகவலைதளமாக விளங்கும் டிவிட்டர், பேஸ்புக் போன்று மிகப்பெரிய வர்த்தகத்தையும் வருமானத்தையும் ஈட்டவில்லை என்றாலும், மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. எலான் மஸ்க் எப்போது டிவிட்டரில் ஆக்டிவாக இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.

டிவிட்டர்

டிவிட்டர்

இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தில் சுதந்திர பேச்சு, ஒப்பன் சோர்ஸ் அல்காரிதம், எடிட் பட்டன், பிளாக்செயின் பேமெண்ட் உட்படப் பல மாற்றங்களை எலான் மஸ்க் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. டிவிட்டரில் சுமார் 80 மில்லியன் பாலோவர்களை வைத்துள்ளது மட்டும் அல்லாமல் தினமும் டஜன் கணக்கில் டிவீட் செய்பவர்.

 நிர்வாகக் குழுவில் இணைந்தார்
 

நிர்வாகக் குழுவில் இணைந்தார்

இதனால் எலான் மஸ்க் டிவிட்டர் பங்குகளை வாங்கியதில் எவ்விதமான வியப்பும் இல்லை, ஆனால் யாருக்கும் தெரியாமல் வாங்கியது அதிர்ச்சி அளித்தது. டிவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய எலான் மஸ்க் செவ்வாய்க்கிழமை 11 பேர் கொண்ட டிவிட்டர் நிர்வாகக் குழுவில் இணைந்தார். இணையும் முன்பே எடிட் பட்டன் குறித்து வாக்கெடுப்பு நடத்தினார்.

2024 வரை மட்டுமே

2024 வரை மட்டுமே

டிவிட்டர் நிர்வாகக் குழுவில் 11வது உறுப்பினராக இணைந்துள்ள எலான் மஸ்க் 2024 வரையில் மட்டுமே இப்பதவியில் இருப்பார், 2024க்கு பின்பு நிர்வாகக் குழுவின் பரிந்துரை படி முடிவு எடுக்கப்பட்டும். இதே போலத் தான் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை வாங்கித் தற்போது மொத்த நிறுவனத்தையும் ஆட்சி செய்து வருகிறார்.

14.9 % பங்குகள் மட்டுமே

14.9 % பங்குகள் மட்டுமே

ஆனால் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தில் அதிகப்படியாக 14.9 சதவீத பங்குகளை மட்டுமே வாங்குவார் என்றும், டிவிட்டர் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அமெரிக்கப் பங்குச்சந்தையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பராக் அகர்வால் உட்பட அனைவரும் நம்மதியாக உள்ளனர்.

பராக் அகர்வார்

பராக் அகர்வார்

எலான் மஸ்க் வருகைக்குப் பின்பு டிவிட்டர் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் சலசலப்பு இருந்தாலும், கட்டாயம் பல முக்கிய மாற்றங்கள் மூலம் டிவிட்டர் அதிகப்படியான ஆதிக்கத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலான் மஸ்க் வருகை மூலம் பராக் அகர்வார் எதிர்காலத் திட்டமான “decentralized” social networking தளமாக டிவிட்டரை மாற்றும் பணியில் இறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk Joins Twitter’s Board; agreed not to take over the company

Elon Musk Joins Twitter’s Board; agreed not to take over the company. Elon musk start giving small and big suggestions on Twitter operations and features. Elon Musk will stay on Twitter’s Board until 2024. Soon twitter might be a decentralized social networking platform. எலான் மஸ்க் வாக்குறுதி.. டிவிட்டர் நிர்வாகக் குழு நம்மதி பெருமூச்சுவிட்டனர்..!

Story first published: Wednesday, April 6, 2022, 10:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.