நோயாளியுடன் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் லாக் தெருவைச் சேர்ந்தவர் 78 வயது முதியவர் நடராஜன். இவர் முடக்க நோய் சிகிச்சைக்காக ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டி இருந்தது. இதற்காக அங்கு செல்வதற்காக தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை பதிவு செய்து நேற்றிரவு வவரவழைத்தனர்.
நடராஜனை அவரது மருமகன் தலைமைக் காவலர் சதீஷ் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றார். கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் வந்தபோது ஆம்புலன்ஸ் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராபின் உள்ளே இருந்த நடராஜன், அவரது மனைவி, மருமகன் தலைமைக் காவலர் சதீஷ் ஆகியோரை கீழே இறங்க வைத்தார். தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஓட்டுனர் ராபின் தகவல் கொடுத்தார். ஆனால் அதற்குள் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்தது. வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது.
இதில் யாருக்கும் காயமில்லை. தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். தலைமைக் காவலர் சதீஷ், நோயாளி நடராஜன் மற்றும் அவரது உறவினர்கள் ஆட்டோ மூலம் காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராபினிடம் கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்க: சீமை கருவேலத்தால் விஷமாக மாறிவிடும் நிலத்தடி நீர் – பின்னணி, பாதிப்பு குறித்து ஓர் அலசல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM