சென்னை:
இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இருக்கின்ற பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 1.8 லட்சம் இருக்கைகளை நிரப்ப ஏதுவாக 2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறவேண்டும்
என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நுழைவு தேர்வு என்பது மத்திய அரசின் பிற்போக்குத்தனமான நடவடிக்கை என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.