உக்ரைனுக்குள் ரஷ்ய படையினர் நுழைந்து போர் தாக்குதல் நடத்த தொடங்கிய நாளை முன்னரே சரியாக கணித்த ரஷ்ய அரசியல்வாதி விளாடிமிர் ஜிரிநோவஸ்கி உயிரிழந்துள்ளார்.
அதன்படி ரஷ்யன் லிபரல் டெமாகிரடிக் கட்சி தலைவர் விளாடிமிர் ஜிரிநோவஸ்கி மாஸ்கோ மருத்துவமனையில் உயிரிழந்தார் என ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் சபாநாயகர் வயசெஸ்லவ் வலோடின் கூறியுள்ளார்.
75 வயதான ஜிரிநோவஸ்கி உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா – உக்ரைன் போர் சண்டை தொடங்கிய போது பெரியளவில் அவர் வைரலானார்.
ஏனெனில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அவர் பேசுகையில், பிப்ரவரி 22 அன்று அதிகாலை 4 மணிக்கு, நீங்கள் உணர்வீர்கள்.
2022ஆம் ஆண்டு அமைதியான ஆண்டாக இருக்க விரும்புகிறேன்.
ஆனால் நான் உண்மையை சொல்லவே விரும்புகிறேன், ஏனெனில் 70 ஆண்டுகளாக நான் உண்மையைச் சொல்கிறேன், அது அமைதியாக இருக்காது.
ரஷ்யாவுக்கு சிறந்து விளங்கும் ஒரு வருடமாக 2022 இருக்கும் என கூறியிருந்தார்.
அதன்படியே பிப்ரவரி 22ஆம் திகதி ரஷ்யா உக்ரனுக்குள் செல்வதற்கான ஆயுத்த பணியின் ஆரம்ப புள்ளி உருவாகி 24ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.