வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்:லஞ்ச வழக்கில் சிக்கிய இம்ரான்கான், மனைவியின் தோழி வெளிநாடு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் , முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்த துணை சபாநாயகர் காசிம் சுரி, பார்லி.,யை வரும் 25க்கு ஒத்திவைத்தார். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது பெயரை இம்ரான் கான் பரிந்துரை செய்தார்.
இந்நிலையில் இம்ரான்கானின் 3-வது மனைவி புஷ்ராபீபியின் நெருங்கிய தோழி பராக்கான். இவர் பலரிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் துணைதலைவர் மரியம் நவாஸ் இம்ரான்கான் மற்றும் அவரது 3-வது மனைவி உதவியுடன் பராக்கான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இம்ரான் கான் தற்போது நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் புதிய அரசு அமைந்தால் தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என பராக்கான் அச்சம் அடைந்தார். இதையடுத்து அவர் 90,000 டாலர்கள் பணத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாய்க்கு தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement