தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது, தெலுங்கானா மற்றும் புதுவை மாநில வளர்ச்சிக்கான பல புதிய திட்டங்கள் தொடர்பாக பிரதமரிடம் விவரித்து அறிக்கை ஒன்றையும் அளித்தார்.
அந்த அறிக்கையில், புதுவையை மாநிலத்தில் விமானநிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டதை அடுத்து, புதுவை மட்டும் இன்றி தமிழகத்தின் 6 மாவட்டங்களும் பயன்பெறுகின்றன. எனவே, புதுவையில் இருந்து விமான போக்குவரத்து வசதி செய்ய வேண்டும்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுவைக்கும், காரைக்காலுக்கும் இடையே கடல், விமான போக்குவரத்து தொடங்க வேண்டும். இது மக்களிடையே தெய்வீக சுற்றுலாவாக கருதப்படும்.
மூடி கிடக்கும் பஞ்சு தொழிற்சாலைகளை திறக்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து அனுமதி வழங்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.