இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன்களை பார்க்க முடிகிறது. ஸ்மார்ட்போனில் இருந்து ஒரு சொடுக்கில் பல பணிகளை எளிதாக முடிக்க முடிகிறது. இதன் காரணமாகவே ஸ்மார்ட்போன்களின் தேவை அதிகரித்து வருகிறது.
திரைப்படத் தொடர்களைப் பார்ப்பதற்கும், கேம்கள் விளையாடுவதற்கும், அழைப்புகள் – அரட்டைகள் செய்வதற்கும் என பல வேலைகளுக்காக நாள் முழுவதும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகிறோம். எனவே உங்கள் போனில் சக்திவாய்ந்த பேட்டரி இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்கள்.
அடிக்கடி பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் போவது உங்களுக்கு பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தியிருக்கலாம். வாடிக்கையாளர்களின் தேவையை கருத்திற்கொண்டு சக்திவாய்ந்த பேட்டரிகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களையும் சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
அதாவது 5000 mAh, 6000 mAh பேட்டரி கொண்ட போன்கள் பொதுவாக சந்தையில் கிடைக்கும். இருப்பினும், 10,000 mAh வரை பேட்டரி கொண்ட சில போன்களும் பயனர் சந்தையில் இடம்பெற்றுள்ளன. இதில்
Tecno POVA 2
,
Samsung Galaxy F62
,
Power Armor 14 Rugged
, S97 Pro ஆகிய போன்கள் அடங்கும். சக்திவாய்ந்த பேட்டரிகளுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஏன் இந்த போன்கள் வெடிக்கிறது? சரியான காரணங்கள் என்ன?
டெக்னோ போவா 2
Tecno POVA 2 சக்திவாய்ந்த பேட்டரியுடன் வரும் இந்தியாவின் முன்னணி போன்களில் ஒன்றாகும். இந்த ஃபோன் 7000 mAh திறன் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரியைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் மெமரி, 64 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி வழங்கப்பட்டுள்ளது.
கேமராவைப் பொருத்தவரை, இது குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48MP மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. மேலும், AI லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 6.95 இன்ச் முழு HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் அமேசான் இந்தியா ஷாப்பிங் தளத்தில் ரூ.11,999க்கு கிடைக்கிறது.
Alert: இந்த 4 எழுத்துகள் இருந்தால் அலர்ட்! போஸ்புக் மெசஞ்சரில் சுழலும் ஆபத்து!
Samsung Galaxy F62
சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனானது 7000 mAh திறன்கொண்ட சக்திவாய்ந்த பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் 6 ஜிபி ரேம் மெமரி, 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் மெமரி உடன் வருகிறது. புகைப்படம் எடுப்பதற்கான குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.
இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, ஒரு 12MP மெகாபிக்சல் சென்சார், இரண்டு 5 மெகாபிக்சல் சென்சார்கள் உள்ளன. மேலும், 12 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது. இதில் 6.7 இன்ச் முழு HD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் ஸ்டோரில் இருந்து ரூ.23,999க்கு வாங்கலாம்.
குண்டை தடுத்த நிறுத்திய ஹெட்போன் – நம்பமுடிகிறதா!
Ulephone Power Armor 14 Rugged
பவர் ஆர்மர் 14 ரக்கட் இந்த பட்டியலில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் ஆகும். இது 10,000 mAh அளவு கொண்ட சக்திவாய்ந்த பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது.
இது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 20 மெகாபிக்சல் முதன்மை சென்சார், இரண்டு 2MP சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இதில் 6.52 இன்ச் HD டிஸ்ப்ளே உள்ளது. இதன் விலை ரூ.28,950ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.
S97 Pro Rugged
S97 ப்ரோ ரக்கட் ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த 8,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் பல மணிநேரம் வரை தடங்கல் இல்லாமல் போனை உபயோகிக்கலாம். இதில் 8 ஜிபி வரை ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது.
இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, இரண்டு 5 மெகாபிக்சல் சென்சார்கள் உள்ளன. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இதில் 6.39 இன்ச் முழு HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. நீர், குளிர், வெப்பம் போன்ற பல சூழ்நிலைகளில் தாக்குப்பிடிக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை அமேசான் ஷாப்பிங் தளத்தில் ரூ.37,500ஆக விற்பனைக்கு உள்ளது.
Tecno-Pova-2 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்MediaTek Helio G85டிஸ்பிளே6.9 inches (17.53 cm)சேமிப்பகம்64 GBகேமரா48 MP + 2 MP + 2 MP + 2 MPபேட்டரி7000 mAhஇந்திய விலை10499ரேம்4 GBமுழு அம்சங்கள்
Tecno-Pova-2Tecno Pova 2 128GB 6GB RAM