கன்னியாகுமரி மாவட்டம் துவாரகாபதி கடற்கரையில் உள்ள ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தில் இருந்து ஏராளமான ஆலிவ் ரிட்லி வகை ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
கடந்த 3 மாதத்திற்கு மேலாக கடற்கரை பகுதியில் ஆமைகள் இட்டு சென்ற முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தில், கடற்கரை மணலுக்கடியில் புதைத்து வைத்து, பாதுகாத்து வந்தனர்.
45 நாட்களுக்கு மேலான நிலையில் முட்டைகளில் இருந்து 126 ஆமைக்குஞ்சுகள் வெளிவந்திருப்பதையடுத்து அவற்றை கடலில் விட்டனர்.