ஜெனீவா,
உலகளவில் கடந்த செவ்வாய்க்கிழமை வரையிலான கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஒரு வார காலத்தில் 90 லட்சம் பேருக்கு உலகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் குறைவு ஆகும். புதிதாக 26 ஆயிரம் பேர் தொற்றால் பலியாகி உள்ளனர். உலகின் எல்லா பகுதிகளிலும் கொரோனா தொற்று பாதிப்பும், பலியும் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
இதற்கிடையே கொரோனா தொற்று ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியுள்ள சீனாவின் ஷாங்காய் நகரில் ஊரடங்குக்கு மத்தியில் மக்களுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. ஒரு வாரத்தில் இந்த நகரில் 90 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.