தமிழ்நாட்டில் XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை – மாஸ்க் அணிவது நல்லது! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை  என்று கூறியுள்ள மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுஇடங்களில் மக்கள்  மாஸ்க் அணிவது நல்லது என வலியுறுத்தி உள்ளார்.

மும்பையில் எக்ஸ்இ என்ற புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. அதிவேகமாக பரவும் இந்த கொரோனா இந்தியா முழுவதும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களில் செய்திகள் பரவின. ஆனால், மத்தியஅரசு, அது தவறான தகவல், அதுபோல ஒரு கொரோனா இந்தியாவில் பரவவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் இதுவரை நடத்தப்பட்டுள்ள சோதனை மாதிரிகளில்,  XEVariantCorona கண்டறியப்படவில்லை. அதனால், பொதுமக்கள் வீண் பதற்றமடைய வேண்டாம், வைரஸ் உருமாறுவது வழக்கமான ஒன்றுதான் ஆனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் மாஸ்க் அணிவது குறித்து தவறாக புரிந்துகொண்டு இருப்பதாக கூறியவர், இன்னும் சில காலம் மாஸ்க் அணிவது நல்லது, பொது இடத்தில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் கூறினார்.

இந்தியாவில் XE வகை புதிய கொரோனா பாதிப்பு இல்லை! மறுக்கிறது மத்தியஅரசு…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.