ஹிஜாப் விவகாரத்தில் முழக்கமிட்ட முஸ்லீம் மாணவிக்கு ஆதரவாக அல்கொய்தா வீடியோ

கர்நாடகத்தில் ஹிஜாப் போராட்டத்தில் துணிச்சலாக அல்லாஹூ அக்பர் கோஷமிட்ட முஸ்லீம் மாணவி முஸ்கானுக்கு அல்கொய்தா தலைவன் அய்மான் அல் ஜாவ்வரி 9 நிமிடங்கள் வீடியோ செய்தி மூலம் பாராட்டு தெரிவித்துள்ளான்.

ஆனால் அல்கொய்தாவோடு தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தங்களை அமைதியாக வாழ விடுமாறும் முஸ்கானின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமது மகளின் படம் தீவிரவாதிகளின் சுவரொட்டிகளில் இடம் பெறுவதை தாம் சிறிதும் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார். அல்கொய்தா இப்பிரச்சினையைத் தூண்டி மோதல்களை அதிகப்படுத்த முயற்சிப்பதாகவும் முஸ்கானின் குடும்பத்தினர் கூறுகின்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.