ஜம்மு- காஷ்மீரில் வரலாற்றுமிக்க முகலாய சாலை விரைவில் திறக்க முடிவு

ஜம்மு- காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​மாவட்டங்களை காஷ்மீர் பள்ளத்தாக்குடன் இணைக்கும் வராலற்றுமக்கி முகலாய சாலை மூடப்பட்டது.

இதையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில் முகலாய சாலை பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் முதல் கனரக இயந்திரங்களுடன் பனி அகற்றும் நடவடிக்கை மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டது. தற்போது, பனி அகற்றும் பணி முடிவடைந்துள்ள நிலையில் முகலாய சாலை விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை பொறியாளர் ரியாஸ் அகமது சவுத்ரி கூறியதாவது:-

பனி அகற்றும் பணியை நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே முடித்துவிட்டோம். சாலையில் 33 கிலோமீட்டர் வரை இரண்டு பாதைகளையும் நாங்கள் சுத்தம் செய்துள்ளோம். இப்பினும், முகலாய சாலையில் 7 கிலோமீட்டர் வரை ஒற்றைப் பாதை அகற்றப்பட்டுள்ளது.

கலப்பை, பனி வெட்டும் கருவி போன்ற பல வகையான உபகரணங்கள் இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார் அதிபர் கோத்தபய ராஜபக்சே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.