ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனால் நிச்சயம் வெல்ல முடியும் என அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் மதிப்பிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையேயான போர் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் ஆபத்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறிவருவதற்கு மத்தியில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி, உக்ரைனில் அதிபர் புதின் தன்னுடைய ஒரு செயல்திட்டத்தில் கூட இதுவரை வெற்றியடையவில்லை என கூறினார்.
மேலும் உக்ரைனுக்கு புதிய ஆயுத அமைப்புகள், காமிக்கேஸி எனப்படும் ஸ்விட்ச்பிளேடு டிரோன்கள், மற்றும் டாங்குகளை தாக்கி அழிக்கும் ஜாவலின் ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைப்பது தொடர்பாகவும் அப்போது அவர் விவாதித்தார்.