புதிய படத்தின் அப்டேட் கொடுத்த லிஜோ மோல் ஜோஸ் மற்றும் லாஸ்லியா ….!

லிஜோ மோல்
ஜோஸ்
மற்றும்
லாஸ்லியா
நடிப்பில் உருவாகும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

நடிகை லிஜோ மோல் ஜோஸ் மற்றும் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா இருவரின் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. படத்திற்கு ‘
அன்னபூர்ணி
‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
த்ரில்லர்
ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை லயனல்
ஜோஷ்வா
இயக்குகிறார்.

நடிகை லிஜோ ஜோஸ் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஜெய் பீம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். லாஸ்லியா பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து தற்போது
கூகுள் குட்டப்பா
படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இருவரும் ‘அன்னபூரணி’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ரஜினியை மிஞ்சிய விஜய்…இதெல்லாம் பெரிய விஷயம்ப்பா..!

அன்னபூரணி படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க,
ஹெக்டர்
ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
யுகபாரதி
வசனம் மற்றும் பாடல்களை எழுத, கலைவாணன் படத்தொகுப்பைக் கையாளுகிறார். இந்தப் படத்தில்
ஹரி
கிருஷ்ணன், தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி மற்றும் வைரபாலன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஒடியா பிக்சர்ஸ் நேதாஜியுடன் இணைந்து கேஎச் பிக்சர்ஸ் மூலம் ஹரி பாஸ்கர் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.