மூன்று ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்? – சிவகார்த்திகேயனுக்கு ஐகோர்ட் கேள்வி
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து கடந்த 2019ல் வெளியான படம் ‛மிஸ்டர் லோக்கல்'. இந்த படத்திற்காக தனக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், ஆனால் ரூ.11 கோடி மட்டுமே தயாரிப்பாளர் வழங்கியதாகவும் மீதி தொகையை வசூலித்து தரும் படி ஞானவேல்ராஜாவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் சிவகார்த்திகேயன்.
இதற்கு ஞானவேல்ராஜா ‛மிஸ்டர் லோக்கல்' படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அந்த படத்தின் கதையே தனக்கு பிடிக்கவில்லை. சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே தயாரித்தேன். மூன்றாண்டுகளாக வழக்கு தொடராமல் இப்போது சிகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தது ஏன், நிறைய உண்மைகளை சிவகார்த்திகேயன் கூறவில்லை என்று பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்?, டிடிஎஸ் தொகை தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில் மற்றொரு மனு தாக்கல் செய்தது ஏன்? என சிவகார்த்திகேயனிடம் சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.