ஆஸ்கர், கிராமி விருது விழாவை புறக்கணிக்க வேண்டும்: கங்கனா

சமீத்தில் நடந்த கிராமி விருது வழங்கும் விழாவில் உலக புகழ்பெற்ற இசை கலைஞர்கள் நினைவு கூறப்பட்டார்கள். ஆனால் இந்தியாவை சேர்ந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கரை நினைவு கூறாமல் புறக்கணித்தனர். இதனால் இனி வரும் காலங்களில் ஆஸ்கர், கிராமி போன்ற விருது விழாக்களை புறக்கணிக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரணவத் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச விருதுகள் என்று கூறிக் கொண்டு விழா நடத்துகிறவர்கள் அவர்களின் இனம் அல்லது சித்தாந்தங்கள் காரணமாக பழம்பெரும் கலைஞர்களை புறக்கணித்து, வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கிறார்கள். அத்தகைய உள்ளூர் விருதுகளுக்கு எதிராக நாம் வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

ஆஸ்கர் மற்றும் கிராமி இரண்டு விருது விழாக்களிலும் பாரத ரத்னா லதா மங்கேஷ்கர்ஜிக்கு அஞ்சலி செலுத்த தவறிவிட்டனர். நமது ஊடகங்கள் உலகளாவிய விருதுகள் என்று கூறிக்கொள்ளும் இந்த உள்ளூர் நிகழ்வுகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு கங்கனா எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.