பெங்களூரு: பெங்களூருவில் ரூ.1.5 கோடி பணத்திற்கு கணக்கு வழங்காத மகன் மீது தீ வைத்து கொளுத்திய தந்தையால் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. உயிருடன் மகனுக்கு தீ வைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன. உயிருடன் எரிக்கப்பட்ட மகன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். மகனுக்கு தீ வைத்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.