புதுடில்லி:’டில்லியில் குதுப்மினார் வளாகத்தில், விநாயகர் சிலைகள் அவமதிக்கும் நோக்கில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை முக்கிய இடத்தில், கவுரவமாக வைக்க வேண்டும்; இல்லாவிடில் அகற்ற வேண்டும்’ என, தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு தேசிய நினைவு சின்னங்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய நினைவு சின்னங்கள் ஆணைய தலைவர் தருண் விஜய் கூறியதாவது:டில்லியில் உள்ள குதுப்மினார் வளாகத்தில், விநாயகர் சிலைகள் அவமதிக்கும் நோக்கில் வைக்கப் பட்டு உள்ளன. குதுப்மினாரை பார்வையிட வருவோரின் காலடியில் இருக்கும் வகையில், அவை வைக்கப்பட்டு உள்ளன. விநாயகர் சிலைகளை முக்கிய இடத்தில், கவுரவமாக வைக்க வேண்டும் என கேட்டு, இந்திய தொல்பொருள் ஆய்வு துறைக்கு கடிதம் எழுதினேன். ஓராண்டுக்கு மேல் ஆகியும் எந்த பதிலும்வரவில்லை. சிலைகளை முக்கிய இடத்தில் வைக்க தொல்பொருள் ஆய்வுத் துறை நடவடிக்கை எடுக்காவிடில் அவற்றை அகற்ற வேண்டும்.இவ்வாறு தருண் விஜய் கூறினார்.
புதுடில்லி:’டில்லியில் குதுப்மினார் வளாகத்தில், விநாயகர் சிலைகள் அவமதிக்கும் நோக்கில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை முக்கிய இடத்தில், கவுரவமாக வைக்க வேண்டும்; இல்லாவிடில் அகற்ற
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.