கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி மெட்ரோ: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான மெட்ரோ ரயில் சேவை 2-வது வழித்தடத்தின் பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மொத்தம் சுமார் 26.8 கிலோமீட்டர் நீளம் இந்த புதிய வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 10.3 கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடத்தில் 9 நிலையங்கள் சுரங்கப் பாதையாக அமைக்கப்பட உள்ளது.
இந்தப் மெட்ரோ வழித்தட கட்டுமானப் பணிகளின்போது வெளியேற்றப்படும் கழிவுகளை பத்திரமாக அகற்றும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 133 மரங்கள் அகற்றப்பட உள்ள நிலையில் அதனை ஈடுகட்டுவதற்காக 12 மடங்கு அதிகமாக அதாவது 1,596 மரங்கள் நடப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.12,669 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த திட்டத்தில் ரூ. 22.33 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக மட்டுமே செலவிடப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.