பிரித்தானியாவில் தொடக்கப்பள்ளி ஆசிரியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்த நபரை அவரது சகோதரி மற்றும் குடும்பத்தார், அருவருக்கத்தக்க மிருகம் என்றும் “கோழை” என்றும் நிதிமன்ற விசாரணையில் முத்திரை குத்தியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் நண்பரை சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய தொடக்கப்பள்ளி ஆசிரியை சபீனா நேசா(28) பிரித்தானியாவின் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள கேட்டர் பார்க்கில் கோசி செலமாஜ்(36) என்ற நபரால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியரை கொலை செய்த கோசி செலமாஜை(36) சபீனா நேசாவின் சகோதரி மற்றும் அவரது குடும்பத்தார் “அருவருக்கத்தக்க மிருகம், கோழை மற்றும் பயங்கரமான மனிதர்” என முத்திரை குத்தியுள்ளனர்.
மேலும் நீதிமன்ற விசாரணையில் பேசிய அவரது சகோதரி, சபீனா நேசாவை சிறந்த பெண்மணி என்றும் மனஉறுதி, பயம், மேன்மையான தெளிவு கொண்ட அற்புதமான பெண் என்றும் தெரிவித்துள்ளார்.
சகோதரி இறந்தவிட்டதாக செய்தி கேட்டபோது எனது குடும்பம் முற்றிலுமாக உடைந்து விட்டதாகவும், யாருக்கும் இடையூறு செய்யாமல் நடந்து சென்று கொண்டிருந்த எனது சகோதரியை கொலை செய்ய எவ்வாறு முடிந்தது.
எனது சகோதரியை கொலை செய்தவர் கண்டிப்பாக மனிதர் அல்ல, அவரொரு மிருகம் என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சபீனா நேசா யார் என்று தெரியாது என்றும், ஆனால் அவரை கொலை செய்ததை ஒத்துக்கொள்வதாகவும் கோசி செலமாஜ் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளார்.