அரசு துறைகளில் காலி இடங்கள் உடனே நிரப்ப பிரதமர் உத்தரவு ..| Dinamalar

புதுடில்லி-”காலியாக உள்ள பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்க, தனியாரை ஊக்குவிக்க வேண்டும் என, மத்திய அரசின் துறை செயலர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்,” என, மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா தெரிவித்து உள்ளார்,

ஆலோசனை

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலர்களை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.அப்போது, செயலர்கள் பலர், பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இலவச திட்டங்கள் குறித்து, கவலை தெரிவித்தனர். ‘அவை பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை; இந்த திட்டங்களால், இலங்கையில் ஏற்பட்டதை போல, அந்தந்த மாநிலங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது’ என குறிப்பிட்டனர்.

இந்நிலையில், மத்திய அரசின் துறை செயலர்களுக்கு, மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:செயலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர், ‘மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க, தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

நடவடிக்கை

அதன்படி, தங்கள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, செயலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, ஆலோசனை வழங்க வேண்டும்.தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கவுபா கூறியுள்ளார். மாநில மொழியில் மருத்துவ படிப்புஆண்டுதோறும் ஏப்ரல் ௭ம் தேதி, உலக சுகாதார தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

latest tamil news

இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று கூறியதாவது: உலக சுகாதார தினத்தில், மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன். இந்த நாள், சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் உள்ளது. அவர்களின் கடின உழைப்பால் தான், பூமி பாதுகாப்பாக உள்ளது.உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீடு திட்டமான, ‘ஆயுஷ்மான் பாரத்’தின் தாயகமாக இந்தியா இருப்பது, நம் அனைவருக்கும் பெருமிதத்தை அளித்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில், மருத்துவ கல்வித்துறை பெரும் மாற்றம் அடைந்துள்ளது. மாநில மொழிகளில் மருத்துவ படிப்பை படிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.