உக்ரைனில் ரஷ்ய சிறப்புப்படையினர் பலர் போரிட மறுத்து கலகத்தில் ஈடுபட்ட சம்பவம், மற்றுமொரு பின்னடைவை புடினின் துருப்புகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ராணுவ வீரர்கள் பலர் உக்ரைனில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது 60 எலைட் பராட்ரூப்பர்கள் கலகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வடக்கு ரஷ்யாவை சேர்ந்த குறித்த வீரர்கள் போருக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்றே கூறப்படுகிறது.
மேலும், குறித்த இராணுவ வீரர்கள் பெலாரஸ் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கலகத்தில் ஈடுபட்டதால், அது இராணுவத்திற்கு இழுக்கு என கூறி, மீண்டும் அவர்களை Pskov முகாமுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.
சிலர் கோழைகள் என முத்திரை குத்தப்பட்டு, வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சிலர் இராணுவ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கும் பொருட்டு தமது பிரதிநிதியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.