புதுடெல்லி: மின்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள 10 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.28,204 கோடி கடன் பெற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
2021-22-ல் மின்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை ரூ.28,204 கோடி கூடுதல் கடன் பெறுவதற்கு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி அதிகபட்சமாக தமிழ்நாடு 7,054 கோடி ரூபாய் கூடுதல் கடன்தொகை பெறுவதற்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு 6,823 கோடி ரூபாய் கூடுதல் கடன்தொகை பெறுவதற்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்துக்கு 5,186 கோடி ரூபாய், ஆந்திர மாநிலத்துக்கு 3,716 கோடி ரூபாய் என்ற அளவில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச தொகையாக 180 கோடி ரூபாய் மணிப்பூர் மாநிலத்துக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
15-வது நிதிக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 0.5 சதவீதம் வரை கூடுதல் கடன் வழங்க மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.