ஜெயநகர்-ஸ்ரீ ராம நவமியை ஒட்டி வரும் 10ல் பத்மநாபநகரில் ராமர் ரதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் மூன்று நாட்கள் வரை, அங்குள்ள வாஜ்பாய் விளையாட்டு மைதானத்தில் நாட்டுப்புற திருவிழா நடக்கவுள்ளது.டில்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆர்.டி.நகர் வீட்டுக்கு சென்றார்.பின், நேராக ஜெயநகரில் உள்ள ராகவேந்திரா சுவாமிகள் மடத்துக்கு வந்தார். மந்த்ராலயாவின் சுபதேந்திர தீர்த்த சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.இதே வேளையில், மந்த்ராலயாவில் அன்னதான பவன் கட்டவும், குடிநீர் வசதி ஏற்படுத்தவும், கர்நாடக அரசு சார்பில் ஐந்து கோடி ரூபாய் வழங்கவும், பெங்களூரில் ஒன்றரை ஏக்கர் நிலம் வழங்கவும் முதல்வர் சம்மதம் தெரிவித்தார்.பின், வருவாய் துறை அமைச்சர் அசோக் கூறியதாவது:ஸ்ரீ ராம நவமியை ஒட்டி வரும் 10ல் பத்மநாபநகரில் ராமர் ரத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்கள், பத்மநாபநகரில் உள்ள வாஜ்பாய் விளையாட்டு மைதானத்தில் நாட்டுப்புற திருவிழா நடக்கவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement