அரிசி, பருப்பு, மருந்துகளை ஈழ மக்களுக்கு அனுப்பத் தயார்: மு.க ஸ்டாலின்

இலங்கையில் கடுமையாக பொருளாதார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகம் சார்பாக இந்திய தூதரகம் மூலம் இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடானஇலங்கையில் கடுமையாக பொருளாதார நெருங்கடி ஏற்பட்டுள்ளது. அந்நியசெலாவணி கையிருப்பு குறைந்ததால், இறக்குமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் அத்தியாவசிய பொருட்களின விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.

மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதன் காரணமாக இலங்கையில் முக்கிய அமைச்சர்கள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் இலங்கையில் அவசர நிலை பிரபகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய உதவி செய்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் தவித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில்,  அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தமிழக அரசு தயாராக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நிவாரண பொருட்களை விநியோகிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி வாயிலா தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.