சென்னை: கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
சென்னை மெரினாவில் நடைபெற்ற மக்களை தேடி மருத்தவம் திட்டத்தின் நிகழ்ச்சியில், ரூ.70 கோடி மதிப்பீட்டில் 389 நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மக்களை தேடி மருத்தவம் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவமனை சேவைக்காக வாங்கப்பட்டுள்ள வாகனங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பர். இந்த நடமாடும் மருத்துவக் குழுவினர், மலை கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று மருத்துவ சேவை வழங்குவதுடன், சுழற்சி முறையில் சென்று சுகாதார சேவை வழங்குவார்கள்.
இதன்மூலம், தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம் மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தம், நீரிவு நோய் பரிசோதனை மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவ சேவை வழங்கப்படும் எண்டுறம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உடன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.