கோரக்நாத் கோயில் அருகே தகராறில் ஈடுபட்ட நபர் யார்? திடுக்கிடும் தகவல் வெளியீடு

உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்நாத் கோயில் அருகே போலீஸார் மீது தாக்குதல் நடத்திய நபர் பெண்ணின் வற்புறுத்தலின் பேரில் ஐ.எஸ். இயக்கத்தில் சேரவிருந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் அமைந்துள்ளது கோரக்நாத் கோயில். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தே இந்தக் கோயிலில் தலைமை பூசாரியாக இருக்கிறார். இதனால் அந்தக் கோயிலை சுற்றிலும் எப்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இதனிடையே, கடந்த 3-ம் தேதி, இளைஞர் ஒருவர் அந்தக் கோயிலை நோக்கி வேகமாக ஓடி வந்ததால் அங்கிருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவர் போலீஸாரை தாக்கினார். இதில் இரண்டு போலீஸார் படுகாயமடைந்தனர்.
image
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை போலீஸார் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் அகமது முர்டாஸா அப்பாஸி என்பதும், அவர் மும்பை ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றவர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், தொடர்ந்து நடந்து வரும் போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரது இ-மெயிலை ஆராய்ந்த போலீஸார், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், அப்பாஸிக்கும் இடையே தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர்.
image
அதாவது, அப்பாஸியை இ – மெயிலில் தொடர்பு கொண்ட அந்தப் பெண், தான் ஐ.எஸ். இயக்கத்தில் சிக்கிக் கொண்டதாகவும், தனக்கு பண உதவி வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார். அதற்கு அப்பாஸியும் ரூ.40 ஆயிரத்தை அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்தப் பெண் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஐ.எஸ். இயக்கத்தில் சேரும் முயற்சியில் அப்பாஸி ஈடுபட்டு வந்திருக்கிறார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.