புதிய அமைச்சரவை தொடர்பில் இழுபறி – அடுத்த வாரம் இறுதி முடிவு



இலங்கையின் புதிய அமைச்சரவையை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அது பிற்போடப்பட்டுள்ளது.

அடுத்த வாரமளவில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

சமகால அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் முன்னெடுத்துள்ள பாரிய ஆர்ப்பாட்டங்களை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தவிர்ந்த, அமைச்சரவை அமைச்சர்கள் முழுமையாக ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.