தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது.
எனினும் ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்றே அதிகரித்து காணப்படுகின்றது. இது சாமானியர்கள் வாங்க சரியான தருணமா?
சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்த சரிவானது இப்படியே தொடருமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
அமெரிக்க அறிவிப்புக்கு செவி சாய்க்காத தங்கம்.. சென்னை, கோவையில் தங்கம் விலை இதுதான்..!
சரிவில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இரண்டு தினங்களுக்கு பிறகு இன்று சற்றே சரிவில் காணப்படுகின்றது. அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்றே சரிவில் தான் காணப்படுகின்றது. எனினும் இந்த சரிவானது இப்படியே தொடருமா? என்பது தான் சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இது டெக்னிக்கலாக இன்னும் சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதனை ஊக்குவிக்கும் விதமாக பணவீக்கமும் உச்சம் தொட்டு வருகின்றது.
தங்கம் விலையை தூண்டலாம்
தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையேயானது பதற்றமானது அதிகரித்து வரும் நிலையில், இது சர்வதேச அளவில் பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்துக்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கத்திற்கு சாதகமான அமையலாம்.இது முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம்.
எண்ணெய் விலை அதிகரிப்பு
சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது, தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கம் என்பது மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கலாம். இது சர்வதேச மத்திய வங்கிகளை வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது தங்கம் விலையில் அழுத்ததினை கொடுக்கலாம்.
இப்படியும் இருக்கலாம்
எனினும் பணவீக்கம் ஏற்கனவே உச்சத்தில் உள்ள நிலையில், பணவீக்கத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் மத்திய வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம். ஏற்கனவே அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தினை சற்று அதிகரித்த நிலையில், வரவிருக்கும் கூட்டத்தில் இன்னும் பெரியளவில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ரஷ்யா மீதான தடைகள்
ரஷ்யா மீது அண்டை நாடுகள் விதித்து வரும் தொடர் தடைகளால், சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்ந்து சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, பல உலோகங்கள், உணவு பொருட்கள், எண்ணெய் விலை என பலவும் உச்சத்தினை எட்டியுள்ளன. இந்த போக்கு இன்று வரையில் தொடர்ந்து கொண்டே உள்ளது. இதனால் பணவீக்கமானது மிக மோசமான ஒன்றாக மாறியுள்ளது.
டெக்னிக்கல் என்ன சொல்கிறது?
தங்கத்தின் விலையானது தினசரி கேண்டில், 5 மணி நேரம், 1 மணி நேரம் என பலவும் மீடியம் டெர்மில் சற்று அதீகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றன. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும் பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வரவிருக்கும் வாரத்தில் எப்படி தொடங்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 6.60 டாலர்கள் குறைந்து, 1931.60 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.13% அதிகரித்து, 24.767 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. இதற்கிடையில் வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 158 ரூபாய் குறைந்து, 51,739 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
வெள்ளியின் விலையானது இந்திய சந்தையில் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 19 ரூபாய் குறைந்து, 66,764 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 23 ரூபாய் அதிகரித்து, 4882 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து, 39,056 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 5326 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 42,608 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 53,260 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்தெ காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 71.30 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 713 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 71,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.எனினும் நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கம், ஃபெடரல் வட்டி விகிதம், டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ரஷ்யா – உக்ரைன் பேச்சு வார்த்தை, கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
gold price on April 8th, 2022: soaring inflation to boost up gold price
gold price on April 8th, 2022: soaring inflation to boost up gold price/தங்கம் விலையில் தடுமாற்றம்.. விடாமல் துரத்தும் பணவீக்கம்.. இனி என்னவாகும்?