அப்போலோ புரோட்டான் மருத்துவமனை நிபுணர் நாளை புதுச்சேரி வருகை| Dinamalar

புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.

புதுச்சேரி அண்ணா நகர் 14வது குறுக்குத் தெரு, ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுஜித்குமார் முல்லபல்லி, நாளை 9ம் தேதி வருகிறார். காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.

புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், கருப்பை புற்றுநோய், தோல் புற்றுநோய், மூளைக்கட்டி, பெண்களின் மார்பக புற்றுநோய் பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். மேலும், புற்றுநோய் நிலை கண்டறிதல், கீமோதெரபி, இலக்கு சிகிச்சை, நோய் எதிர்ப்பு சிகிச்சை, நோய் தடுப்பு சிகிச்சை மற்றும் புற்றுநோய் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் ஆலோசனை பெறலாம். முன் பதிவிற்கு 96771 33345, 72990 62029 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.