சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோடை காலத்தையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து 62 சிறப்பு ரெயில்கள் வாரம் தோறும் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் பின்னர் அங்கிருந்து தாம்பரத்திற்கும் எண். 06005/06006 ஆகிய சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
சிறப்பு கட்டணத்தில் அதிவேக ரெயிலாக 10 சர்வீஸ் இயக்கப்படும். ஏப்ரல் 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும்.
இதே போல நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஏப்ரல் 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு வந்து சேரும்.
திருநெல்வேலி-தாம்பரம் அதிவேக சிறப்பு கட்டண ரெயில் எண். 06004 / ஏப்ரல் 17, 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
ரெயில் எண். 06003 தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் ஏப்ரல் 18, 25, மே 2, , 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.35 மணிக்கு நெல்லை போய் சேரும்.
தாம்பரம்- எர்ணாகுளம் சிறப்பு ரெயில் எண். 06019 மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் ஏப்ரல் 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் புறப்பட்டு செல்லும்.
இதே போல எதிர் மார்க்கத்தில் எர்ணாகுளத்தில் இந்த ரெயில் எண். 06020 இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரெயில் ஏப்ரல் 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.