ரியல்மி நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் தொகுப்பான ஜிடி சீரிஸில் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை சேர்த்துள்ளது.
Realme GT 2 Pro
ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.49,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரியல்மி போன் பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் பயனர்கள் 2K சூப்பர் ரியாலிட்டி டிஸ்ப்ளே, பேப்பர் டெக் மாஸ்டர் டிசைன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 புராசஸர் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இரட்டை 50 மெகாபிக்சல் கேமரா இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி 2 ப்ரோ சிறப்பம்சங்கள்
(Realme Gt 2 Pro Specifications)
புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் 6.7″ இன்ச் சூப்பர் AMOLED 2K LTPO டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 120Hz ரெப்ரெஷ் ரேட் ஆதரவை இது பெறுகிறது. இதன் டச் சேம்பிளிங் ரேட் 1000Hz ஆக உள்ளது. 3216×1400 பிக்சல் ரெசலியூஷனை இந்த டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளேயின் மேல்பாகத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு நிறுவப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனை 4nm நானோமீட்டர் கட்டமைப்பு கொண்ட Snapdragon™ 8 Gen 1 Platform இயக்குகிறது. புதிய தலைமுறை அட்ரினோ கிராபிக்ஸ் எஞ்சின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேபர் டெக் மாஸ்டர் டிசைன் ஒரு புதுவித லுக்கை அளிக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான realme UI 3.0 ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது.
108MP ப்ரோ லைட் கேமராவுடன் ரியல்மி 4ஜி போன் அறிமுகம்!
ரியல்மி ஜிடி 2 ப்ரோ கேமரா (Realme Gt 2 Pro Camera Quality)
இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க மூன்று கேமரா கொண்ட அமைப்பு உள்ளது. இதில் முதன்மை சென்சாராக SONY IMX766 OIS 50MP மெகாபிக்சல் கேமரா, 50MP மெகாபிக்சல் சூப்பர் வைட் கேமரா, மைக்ரோ லென்ஸ் கேமரா 2.0 ஆகிய கேமராக்களைக் கொண்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 32MP மெகாபிக்சல் SONY IMX615 Sensor கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ப்ளூடூத் 5.2, வைஃபை 6, யூஎஸ்பி டைப் சி, மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், ஆகிய இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. புதிய ரியல்மி பிரீமியம் போனில் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் வரும் இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி 2 ப்ரோ பேட்டரி (Realme Gt 2 Pro Battery)
இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 65W சூப்பர் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. ஸ்மார்ட்போன் உடன் பாஸ்ட் சார்ஜரும் வழங்கப்படுகிறது. இது ரிவர்ஸ் சார்ஜிங் வசதியையும் பெறுகிறது.
இதில் 360 டிகிரி NFC, லைட் சென்சார்ஸ், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகிய அம்சங்கள் உள்ளன. தெளிவான சிக்னல்களுக்காக Antenna Array Matrix System பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போனை சூடாகாமல் தடுக்க Stainless Steel Vapour Cooling System Max என்ற புதிய அம்சம் நிறுவப்பட்டுள்ளது.
டாடாவின் ‘நியூ’ சூப்பர் ஆப் அறிமுகம் – போட்டி ஆப்ஸ்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் ஆஃபர்கள்!
ரியல்மி ஜிடி 2 ப்ரோ விலை (Realme Gt 2 Pro Price in India)
புதிய ரியல்மி போன் 8GB அல்லது 12GB ஆகிய இரு ரேம் தேர்வுகளில் வருகிறது. UFS 3 தொழில்நுட்பத்தில் 128GB, 256GB என இரண்டு ஸ்டோரேஜ் மெமரி ஆதரவுடன் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. பேப்பர் கிரீன், பேப்பர் வைட், ஸ்டீல் பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ள ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8GB+128GB வேரியன்டின் விலை ரூ.49,999 ஆகவும், 12GB+256GB விலை ரூ.57,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14, 2022 அன்று பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம், ரியல்மி தளம், ரியல்மி ஸ்டோர்ஸ் மூலம் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. அறிமுக சலுகையாக HDFC, SBI வங்கி கடன் அட்டை அல்லது Debit card பயனர்களுக்கு ரூ.5000 தள்ளுபடி கிடைக்கிறது.