மதுரை: அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே என வெங்கடேசன் எம்.பி. ட்விட் செய்துள்ளார். ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே ஒன்றிய அரசின் தந்திரம் என குறிப்பிட்டார். மேலும் தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.