மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி! பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், 25,500 மக்கள் நலப்பணியாளர்கள் கலைஞர் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்களை நீக்கி விட்டனர். அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும்,  விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று வறியவர், விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளராக சேரலாம். மக்கள் நலப்பணியாளர்களுக்கு ஒட்டு மொத்த மதிப்பூதியமாக மாதந்தோறும் ரூ.7,500 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார்.

மேலும,  10 ஆண்டுகளில் காலமான மக்கள் நலப்பணியாளர்களின் வாரிசுதாரர்களும் விரும்பினால் பணியில் சேரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/makkal-nala-stalin08-04-01.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/makkal-nala-stalin08-04-02.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/makkal-nala-stalin08-04-03.jpg) 0 0 no-repeat;
}

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.