உக்ரைன் படையெடுப்பில் பெரும் இழப்பை ஒப்புக்கொண்ட ரஷ்யா!


உக்ரைனில் 44-வது நாளாக தாக்குதலை தொடர்ந்துவரும் ரஷ்யா, இராணுவ படையின் குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்துள்ளதாக ஒப்புகொண்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஸ்கை நியூஸிடம் பேட்டியளித்தபோது, இந்த உயிரிழப்புகள் “எங்களுக்கு ஒரு பெரிய சோகம்” என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், வரவிருக்கும் நாட்களில் மாஸ்கோ அதன் போர் இலக்குகளை அடையும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

மேலும், உக்ரைன் “ரஷ்யாவுக்கு எதிரானது” மற்றும் “உக்ரைனில் நடந்த அனைத்தும் ரஷ்ய நாட்டிற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டது” என்று அவர் குற்றம் சாட்டினார்.

உக்ரைனின் புச்சா நகரில் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு ரஷ்ய துருப்புக்கள் தான் பொறுப்பு என்ற குற்றச்சாட்டை பெஸ்கோவ் மறுத்துள்ளார். மேலும், நகரத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் படங்கள் அரங்கேற்றப்பட்டதாக அவர் கூறினார்.

இருப்பினும், ரஷ்யா கணிசமான உயிரிழப்புகளை சந்தித்துள்ளது என்று அவர் ஒப்புக்கொண்டார். மார்ச் 25 அன்று, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், போரில் அதன் வீரர்கள் 1,351 பேர் கொல்லப்பட்டதாகக் கூறியது. அதேசமயம், கிட்டத்தட்ட 19,000 ரஷ்ய வீரர்கள் இருந்துள்ளதாக உக்ரைன் கூறுகிறது. 7,000 முதல் 15,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக மேற்கத்திய தலைவர்கள் நம்புகின்றனர்.

ரஷ்யா அல்லது உக்ரைனின் ரஷ்ய இழப்புகள் பற்றிய மதிப்பீடுகள் சுயாதீனமாக சரிபார்க்கப்பட முடியாது, உக்ரைன் அதன் மன உறுதியை அதிகரிக்க அவ்வாறு இறப்பு எண்ணிக்கையை உயர்த்தி கூறலாம் என்று அவர் கூறினார்.

2000 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றிய பெஸ்கோவ் மேலும் பேசுகையில், போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிகளை ரஷ்யா தேடுவதாகவும் கூறினார்.

அந்த நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர நமது ராணுவம் தங்களால் இயன்றதைச் செய்து வருகிறது என்றார் அவர். “வரும் நாட்களில், எதிர்வரும் நாட்களில், இந்த நடவடிக்கை அதன் இலக்குகளை அடையும் அல்லது ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அதை முடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ரஷ்யா அதன் துருப்புக்களை தலைநகர் கீவில் இருந்து விலக்கி, தனது படையின் பெரும்பகுதியை கிழக்கு உக்ரைனுக்கு மாற்றியுள்ளது, ஆனால் சண்டை முடிவதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.