பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் உச்சகட்ட கோஷ்டி மோதல்; ஆர்ப்பாட்டத்தில் பேசிய சித்துவுடன் கட்சி நிர்வாகி நேருக்குநேர் வாக்குவாதம்

சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தின் போது அக்கட்சியின் தலைவரான சித்துவிடம் மாநில நிர்வாகி ஒருவர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள காங்கிரஸ் பவன் முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் பேசிய மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, அக்கட்சியின் வெற்றிக்காக நேர்மையான தலைவர்களை முன்னிறுத்தப்போவதாக கூறினார். ‘கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்தால் முதலில் ஆளாக குரல் கொடுப்பேன்; ஆனால் பணமூட்டைகள் பிடிபட்டால் அவர்களுக்காக பேசமாட்டான்’ என குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட இளைஞர், காங்கிரஸ் தலைவர் பிரேந்தர் சிங் தில்லால், தவறு செய்தவர்களின் பெயரை குறிப்பிட்டு கூற வேண்டும் என்று கூறி, நேருக்கு நேராக சித்துவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காங்கிரசின் உட்கட்சி மோதல், பொதுவெளிக்கு வந்ததால் மூத்த கனகிராஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இதனிடையே, எந்தவொரு தனிநபருக்கும் எதிரான சண்டையும் இல்லை. கூட்டுத் தோல்வி என்பதால் நாம் ஒருவருக்கொருவர் சேற்றை வீசக் கூடாது. நாங்கள் உட்பூசல்களால் பாதிக்கப்பட்டுள்ளோம். பொதுமக்களுக்காக ஒன்றுபட்டு போராட வேண்டிய நேரம் இது என்று சித்துவுடன் வாக்குவாதம் செய்த பிரேந்தர் சிங் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ் கட்சி. மொத்தமுள்ள 117 தோகுதிகளில் காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளை மட்டுமே வென்றது.               

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.