மும்பை: இந்திய பங்கு சந்தையானது இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று காலை ஏற்றத்தில் தொடங்கி, பின்னர் சரிவினைக் கண்டு, முடிவிலும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
இது இந்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. இது இன்னும் சிறிது காலத்திற்கு வட்டி விகிதம் பெரியளவில் அதிகரிக்காது என்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..!
இதற்கிடையில் இந்திய பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் பற்றிய கணிப்பினை அறிவித்துள்ளது. இது ஜிடிபி-வளர்ச்சி விகிதத்தினை 7.2% மாற்றியமைத்துள்ளது.இது முன்னதாக 7.8% ஆக மதிப்பிடப்பட்டிருந்தது. இதே பணவீக்க விக்கிதம் 4.5%ல் இருந்து 5.7% ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தான் இன்று வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இது சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இன்று காலை ப்ரீ ஓபனிங்கிலேயே சந்தையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 219.99 புள்ளிகள் அதிகரித்து, 59,254.94 புள்ளிகளாகவும், நிஃப்டி 76.60 புள்ளிகள் அதிகரித்து, 17,716.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1677 பங்குகள் ஏற்றத்திலும், 297 பங்குகள் சரிவிலும், 53 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
முடிவில் எப்படி?
இதனையடுத்து சென்செக்ஸ் முடிவில் 412.23 புள்ளிகள் அல்லது 0.70% அதிகரித்து, 59,447.18 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 144.80 புள்ளிகள் அல்லது 0.82% புள்ளிகள் அதிகரித்து, 17,784.30 புள்ளிகளாகவும் முடிவுற்றுள்ளது. இதற்கிடையில் 2232 பங்குகள் ஏற்றத்திலும், 1072 பங்குகள் சரிவிலும், 117 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ்,நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. நிஃப்டி ஐடி குறியீடு மட்டும் சற்று சரிவில் காணப்படுகிறது. பிஎஸ்இ கன்சியூமர், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றம் கண்டும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள கிரசிம், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஐடிசி, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சிப்லா, டெக் மகேந்திரா, மாருதி சுசுகி, என்.சி.பி.சி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐடிசி, எம் &ஏம், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டைட்டன் நிறுவனம், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதுவே டெக் மகேந்திரா, மாருதி சுசுகி, என்.டி.பி.சி, ஹெச்.சி.எல் டெக், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
closing bell: sensex gains 412 points, nifty ends nearly 17,800
closing bell: sensex gains 412 points, nifty ends nearly 17,800 /ஆர்பிஐ நடவடிக்கையால் முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. சென்செக்ஸ் 412 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவு..!